சுயசேவை நுழைவாயிலுக்கு வரவேற்கிறோம்

இந்த நுழைவாயிலில், தமிழ்நாடு வனத்துறை கீழ்க்காணும் இணையவழிச் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது:

  1. ‘பட்டா’ (ஆவணத்துடன் உரிமை வழங்கப்பெற்றுள்ள நிலம்) (தனியார்) நிலம் மற்றும் வருவாய் நிலத்தில் வளர்க்கப்படும் சந்தன மரம் (மரங்கள்) வெட்டுதலுக்கும், விற்பதற்குமான அனுமதி.
  2. ‘பட்டா’ நிலத்திலும் (தனியார் நிலத்திலும்), வருவாய் நிலத்திலும் வளர்க்கப் படும் செம்மரங்கள், கருமரங்கள், ‘சில்வர் ஓக்’ மரங்கள், இளஞ்சிவப்பு நிற மரங்கள் (தமிழ்நாட்டில் பல்வேறு சட்டங்கள் / விதிகளின் கீழ்)அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களுக்கு வெளியே மற்றும் தேக்கு மரங்களை வெட்டுவதற்கான முன் தகவல் அளித்தல்.
  3. சொத்து அடையாளப்பதிவு / புதுப்பித்தல் மற்றும் செம்மரங்கள் / மரத்துண்டுகள் (மரக்கட்டைகள்) தவிர, விலக்கு அளிக்கப்படாத மர வகைகைளை ஏற்றிச் செல்வதற்கான இசைவாணை வழங்கி அனுமதித்தல்.
  4. 4. சொத்து அடையாளப்பதிவு / புதுப்பித்தல் மற்றும் செம்மரம் (செம்மரங்களை / செம்மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கான இசைவாணை வழங்கி அனுமதித்தல்.

குறிப்பு

  1. (மரங்கள் வெட்டப்படுவதற்குரிய பகுதிகள், தமிழ்நாடு தனியார்காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1949ன் படி, (மரம் / கோப்புகள் / அலுவலகங்கள் – தமிழ்நாடு வனப்பாதுகாப்பு) அல்லது தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு)சட்டம், 1955ன் படி (மரம் / கோப்புகள் / அலுவலகங்கள் – தமிழ்நாடு வனப்பகுதிகள் சட்டம்) தனியார் வனப்பகுதியில் அல்லது மலைப்பகுதியில் அமைந்திருந்தால், விண்ணப்பதாரர் உரிய அனுமதியை / ஒப்புதலைப் பெற தொடர்புடைய மாவட்ட ஆட்சியரை (மாவட்டக்குழுத் தலைவரை) அணுகவேண்டும்.
  2. மரங்கள் வெட்டப்படவுள்ள பகுதியாளது ஓர் காப்புக்காடாக / காப்பு நிலமாக (சரணாலயம் (புகலிடம்), தேசியப்பூங்கா அல்லது இயற்கை வளப் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு – இவை போன்றவகையாக) இருப்பின், மரங்களை வெட்டுவது என்பது வன (பாதுகாப்பு)ச் சட்டம், 1980ன் படி, காடுகளைத் திசைதிருப்பும் செயல்முறையின் பகுதியாக அமையும்.இப்பகுதிகளில், மரங்கள் வெட்டுவதற்கு தடையில்லாச் சான்று, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற(ம்) அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், இதனை வலைத்தளம் வழியாக விண்ணப்பித்துப் பெறலாம். (வலைதளம் – https://www.forestclearance.nic.in அப்படிப்பட்ட நேவுகளில், மரங்களை வெட்டுவதற்கு, தமிழ்நாடு அரசு, தனியே, தடையில்லாச் சான்று வழங்குதல் என்ற தேவை எழவில்லை.
  3. மேலே கூறப்பட்டுள்ள இனங்கள் i மற்றும் ii-ல் உள்ளவை தவிர மற்ற இடங்களில் (தனியார் ஆவணத்துடன் உரிமை வழங்கப்பட்டுள்ள நிலத்திலும், வருவாய் நிலத்திலும்) மரங்களை வெட்டுவதற்கு, மேற்கண்ட சேவைகளுக்கான விண்ணப்பங்கள் இணைய நுழைவாயிலில் வரவேற்கப்படுகின்றன.

இணைய வழி விண்ணப்பங்களுக்கான அறிவிப்புப் பலகை

சேவையின் பெயர் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்கள்
மரம் வெட்டுதல் – சந்தன மரம் 53 8
சந்தன மரம் தவிர ஏனைய மரங்களை வெட்டுதல் 2412 1803
மரம் ஏற்றிச் செல்லுதல் – செம்மரங்கள் 109 34
விலக்களிக்கப்படாத மர வகைகளை ஏற்றிச் செல்லுதல் 814 455
© 2017-2019. All rights reserved.